[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.17, 2016 (17/10/2016)
தலைப்பு: வரலாற்றில் சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
உலக உணவு நாள் – அக்டோபர் 16
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதை குறிக்க அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு நாள் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினத்தின் நோக்கம்:
பட்டினி சிரமங்களை பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பட்டினியை ஒழிக்கவும் இந்நாள் பின்பற்றப்படுகிறது.
2016 ஆண்டு கரு :
“காலநிலை மாறி வருகிறது ; உணவு மற்றும் விவசாயம் கூட மாற வேண்டும். “
FAO (ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் கூட்டமைப்பு) பற்றி :
இது பசி, பட்டினியை போக்க சர்வதேச முயற்சிகளுக்கு வழிவகுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனம் ஆகும். அதன் தலைமையகம் இத்தாலியில் உள்ள ரோம்மில் உள்ளது.
அதன் முக்கிய இலக்குகள்:
பசி ஒழிப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
வறுமையை நீக்குதல் மற்றும் அனைவரின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிநடத்துகிறது.
தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் நலனுக்காக, நிலையான மேலாண்மை நிலம், நீர், காற்று, காலநிலை மற்றும் மரபணு ஆதாரங்கள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் அளவுடன் பயன்படுத்துதல்.
தலைப்பு – அரசியல் அறிவியல் – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியா – ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தம்
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் 17 வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர மாநாட்டில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ரஷ்யாவில் இருந்து Kamov 226T ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 Krivak வர்க்க போர் கப்பல்கள் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தலைப்பு: வரலாற்றில் சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17
ஐக்கிய நாடுகள் டிசம்பர் 1992 – இல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 அன்று, வறுமை ஒழிப்பு தினம் அனுசரிக்க ஒரு தீர்மானத்தை ஏற்றது.
முதல் முறையாக வறுமை ஒழிப்பு தினம் 1993 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
2016 – ம் ஆண்டின் கரு :
“அவமானம் மற்றும் விலக்கலில் இருந்து அனைத்திலும் பங்கு பெற நகருதல் : அதன் அனைத்து வடிவங்களிலும் வறுமை முடிவு காணவேண்டும்”
தலைப்பு – அரசியல் விஞ்ஞானம் – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
பிரிக்ஸ் – BIMSTEC
கோவாவில் நடைபெற்ற BRICS உச்சிமாநாட்டுடன் சேர்த்து, BIMSTEC எல்லை உச்சிமாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம் மாநாட்டில் அனைத்து BRICS- BIMSTEC உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.
BIMSTEC பற்றி:
BIMSTEC – இது வங்காளவிரிகுடாவின் தொடக்கநிலை பன்-பிரிவு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆகும்.
BIMSTEC உறுப்பு நாடுகளாக வங்காளம், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபால் ஆகியவை உள்ளன.
தலைப்பு – வரலாறு – செய்திகளில் உயர்ந்த மனிதர்கள்
BSI ஜானகி அம்மாள் பங்களிப்புகளை கொண்டாடுகிறது
கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் தாவர கணக்கெடுப்பு பிரிவு (BSI), ஜானகி அம்மாள் பங்களிப்பு கொண்டாட அவரது சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகத்தில் அவரது பங்களிப்புகளை கொண்டு கண்காட்சி மூலம் ஏற்பாடு செய்த்துள்ளது.
ஜானகி அம்மாள் பற்றி:
அவர் 60 ஆண்டுகளுக்கு முன் BSI – யை நிறுவியுள்ளார். அவர் பல ஆண்டுகள் BSI – ன் தலைவராக பணியாற்றி உள்ளார்.
1997 ல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் ஆவர்.
அவர் ஆயிரக்கணக்கான பூக்கும் தாவர இனங்களை ஆய்வு செய்து “சாகுபடி செய்யப்பட்ட தாவரங்கள் என்ற அட்லஸ்” எழுதியுள்ளார்.
கரும்பு மற்றும் முட்டைவகை தாவரங்கள் அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகும்.
அவர் 1897 ஆம் ஆண்டு பிறந்து 1984 ல் இயற்கை எய்தினார்.
[/vc_column_text][/vc_column][/vc_row]